2 டாக்டர் சினேகா

1.5K 75 12
                                    

2 டாக்டர் சினேகா

ஒரு மணி நேரத்திற்கு பிறகு...

ஹோலி கிரிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஸ்டெஃபானியா, டாக்டர் ரோஸுடன் தனது அருகிக்குள் நுழைவதை கண்ட சினேகா, திடுக்கிட்டு எழுந்து நின்றாள். 

"குட் ஆஃப்டர்நூன், டாக்டர்"

"குட் ஆஃப்டர்நூன்... எதுவும் பிரச்சனை இல்லயே?"

"நோ, டாக்டர்"

"நீங்க ஒரு திறமையான டாக்டர். ஆனா உங்களுடைய திறமை, யாருக்குத் தேவையோ அவங்களுக்கு பயன்படணும். நீ எதுக்காக இந்தியாவுக்கு போக விரும்ப மாட்டேங்கிறேன்னு எனக்கு தெரியாது. அது என்ன காரணமா வேணும்னாலும் இருக்கட்டும். ஒரு டாக்டரா, உயிரை காப்பாத்த வேண்டியது ரொம்ப முக்கியம். ஒவ்வொரு டாக்டருடைய வாழ்க்கையிலயும் அது எழுதப்படாத விதியாய் இருக்கணும். உன்னோட சொந்த பிரச்சனையெல்லாம் ஓரமா வச்சிட்டு, இந்தியாவுக்கு போய் அந்த குழந்தையோட உயிரை காப்பாத்து. என்னுடைய வார்த்தைக்கு நீ மரியாதை கொடுப்பேன் நம்புறேன்" என்றார் ஸ்டெஃபி.

அவர் அருகில் நின்றிருந்த ரோஸை சினேகா பார்க்க, அவளோ ஸ்டெஃபியின் பின்னால் ஒளிந்து கொண்டாள். சினேகாவுக்கு தெரியும், இதைப்பற்றி ஸ்டெஃபியிடம் கூறியது ரோஸ் தான் என்று. ஸ்ஃடெபி கூறுவதில் தவறு ஒன்றும் இல்லை. நோயாளியின் உயிர் என்று வரும் பொழுது, மருத்துவர்கள், தன்னுடைய சொந்த பிரச்சினைகளை அதில் கொண்டு வந்து இணைக்க கூடாது.

"போவல்ல?" என்றார் ஸ்டெஃபி.

ஆம் என்ற தலையசைத்தாள் சினேகா. சினேகாவை பொருத்தவரை, ஸ்டெஃபி, அன்னையைப் போன்றவர். சினேகா லண்டன் சென்ற பொழுது அவளுக்கு தேவையான சகல உதவிகளையும் செய்து கொடுத்து ஆதரித்தவர் ஸ்டெஃபி தான். அவரை மறுத்து பேசும் தைரியம் சினேகாவுக்கு வந்ததே இல்லை, அது என்ன விஷயமாக இருந்தாலும் சரி.

"எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பு. அங்கே இருக்கிறவங்களை தவிக்க விடாதே. ஏன்னா, இது ஒரு குழந்தையோட உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சனை. இங்க உனக்கு எந்த மேஜர் சர்ஜரியும் இப்போதைக்கு இல்ல. உன்னோட எல்லா செட்யூல்ஸையும் நான் வேற டாக்டர்ஸை வச்சு மேனேஜ் பண்ணிக்கிறேன்"

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now