30 இதயத்தின் கதறல்

1K 70 12
                                    

30 இதயத்தின் கதறல்

வெங்கட்ராகவனின் முகபாவம் மாறியதை கவனித்த யாழினியன் அவரிடம் வந்தான்.

"அங்கிள், என்னோட கேள்விக்கு உங்களால தான் பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறேன்" என்றான்.

தயங்கியபடி நின்றார் வெங்கட்ராகவன்.

"இவளை நம்ம குறைச்சி எடை போடக்கூடாது அங்கிள். ஆர்த்தியை எங்கேயோ ஒளிச்சி வச்சிட்டு, நான் தான் ஆரத்தின்னு எல்லாரையும் ஏழு வருஷமா நம்ப வச்சுக்கிட்டு இருக்கா. அதை செய்ய ரொம்ப பெரிய தைரியம் வேணும், அங்கிள். ஆர்த்தியை நினைக்கும் போது கொலை நடுங்குது. எந்த க்ளூவும் கிடைக்காம அவளை கண்டுபிடிக்கிறது கஷ்டம் அங்கிள்."

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, யாழ். ஆனா, ஒரே ஒரு சாத்தியக்கூறு இருக்கு"

"அது என்னன்னு சொல்லுங்க"

"நான் டெபுடி கலெக்டரா ராமநாதபுரம் மாவட்டத்தில சர்வீஸ்ல சேர்ந்த போது, அங்க ஒரு பொண்ணோட எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனசார காதலிச்சோம். அந்த பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா, அவளோட அக்கா புருஷனுக்கு, அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல. பணத்துக்காக, தன்னோட முதலாளிக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்க அவன் நினைச்சான். அப்போ தான், அவ கர்ப்பமா இருக்கிறதா சொன்னா. நிச்சயம் அவளை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சத்தியம் செஞ்சேன். உண்மையிலேயே நான் அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா அதுக்கு அடுத்த நாள், டெம்ப்ரவரி டூட்டிக்காக என்னை கன்னியாகுமரி அனுப்பிட்டாங்க. ஒரு மாசம் கழிச்சி நான் மறுபடி ராமநாதபுரம் வந்த போது, அவ அங்க இல்ல. ராமநாதபுரத்தில் நான் அவளை தேடாத இடம் இல்ல. ஆனா எங்க தேடியும் அவ கிடைக்கல. அதே வருஷம், நான் ஆர்த்தியோட அம்மாவை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுச்சு. எங்கம்மா படுத்த படுக்கை  ஆயிட்டாங்க. சாகுறதுக்கு முன்னாடி என்னோட கல்யாணத்தை பாக்கணும்னு அவங்க ஆசைப்பட்டாங்க. அதனால, என்னோட அத்தை மகளையே எங்க அப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு. இதைத் தவிர, சொல்லறதுக்கு வேற எதுவும் இல்ல"

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now