42 இடமாற்றம்

1K 65 8
                                    

42 இடமாற்றம்

லண்டன்/ ஹோலி கிரிஸ்ட் மருத்துவமனை

சினேகா யார் என்பதை டாக்டர் ரோஸ் விவரிக்க, அதைக் கேட்ட ஸ்டஃபி, அதிர்ந்து  அமர்ந்திருந்தார். சினேகாவை பற்றி ரோஸிடம் ஏற்கனவே அனைத்தையும் கூறிவிட்டிருந்தான் மகேந்திரன். தங்களுடன் ஏழு ஆண்டுகளாய் பழகிக் கொண்டிருந்த ஒரு பெண், ஒரு மோசடிக்காரி  என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

"என்னால இதை நம்ப முடியல" என்றார் ஸ்டஃபி.

"என்னாலையும் நம்ப முடியல டாக்டர். எவ்வளவு புத்திசாலித்தனமா அவ நம்ம எல்லாரையும் ஏமாத்தியிருக்கா..."

"ஒரு கார்டியாலஜிஸ்ட்டா இருந்துகிட்டு, எப்படி அவளால இப்படி இதயம் இல்லாம நடந்துக்க முடிஞ்சது?"

"அவ ஒரு கார்டியாலஜிஸ்டா இருந்தாலும், அவ இதயம் இல்லாதவ தான்... இல்லன்னா, ஆர்த்தியை அவள் குழந்தைகிட்ட இருந்தும், அப்பாகிட்ட இருந்தும் இப்படி பிரிச்சு வச்சிருப்பாளா?" என்றாள் ரோஸ் ஆத்திரத்துடன்.

"அவ மறுபடியும் இங்கிலாந்துக்குள்ள காலடி எடுத்து வைக்கக் கூடாது. அவ மேல நான் போலீஸ் கேஸ் கொடுக்கப் போறேன்" என்றார் ஸ்டிஃபி காட்டமாக.

"ஆமாம் டாக்டர். நம்ம ஆர்த்தியோட சர்டிபிகேட்டை திரும்பி அனுப்பணும். அப்ப தான் அவளால மறுபடி ப்ராக்டிசை ஆரம்பிக்க முடியும்"

"சட்டப்படி என்னென்ன செய்யணுமோ, அதை எல்லாம் செஞ்சுட்டு, நான் அவளுடைய சர்டிபிகேட்டை திருப்பி அனுப்புறேன்"

"தேங்க்யூ டாக்டர்"

அவர்கள் இருவரும் சினேகாவை பற்றிய உண்மையால், ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு மருத்துவர் செய்த அந்த இழி செயலை  அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

........

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தன் அம்மாவுடன் தான் தங்கி இருந்த இடத்திற்கு வந்த சினேகா, மலைத்து நின்றாள். அந்த முன்பின் தெரியாத பெண் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு, தான் முன்பு தங்கி இருந்த இடத்திற்கு வந்தாள் சினேகா. அங்கு தனக்கு ஏதாவது உதவி கிடைக்கும் என்று அவள் எதிர்பார்த்து இருந்தாள். ஆனால் அந்த இடம், கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அடியோடு மாறி விட்டிருந்தது. ஷாப்பிங் மால்களும், கம்ப்யூட்டர் சென்டர்களும், ஹோட்டல்களும், உயர்ந்து நின்று பிரமிப்பூட்டின.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now