9 பழி

1.2K 65 10
                                    

9 பழி

கதாசிரியரின் எண்ணம்: நான் என் பொறுமையை இழந்து விட்டேன். யாழினியனுக்கும் ஆர்த்திக்கும் இடையில் நடந்தது என்ன என்ற உண்மையை தெரிந்துகொள்ள எவ்வளவு தான் காத்திருப்பது? இவர்கள் ஒவ்வொருவராய் தங்கள் பழங்கால நினைவுகளில் மூழ்கி வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் எனக்கு. நான் கடந்த காலத்திற்கு சென்று நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன். என் விரல்களை சொடுக்கி, நிகழ்காலத்தை அப்படியே நிறுத்தப் போகிறேன். இந்த கதையின் ஆசிரியராய், அதை என்னால் செய்ய முடியும் என்று நினைக்கிறேன். நான் இப்போது டைம் மிஷினில் அமர்ந்து, சீட் பெல்டையும் போட்டுகொண்டு விட்டேன். அவர்களுடைய கல்லூரி காலத்திற்கு பயணமாக போகிறேன். அட... நீங்கள் இல்லாமலா...? நீங்களும் தாராளமா என்னுடன் இணைந்து கொள்ளலாம். வாருங்கள் கடந்த காலம் நோக்கிப் பயணிப்போம்...

அன்று...

ஆர்த்தி, யாழினியனை கண்முடித்தனமாய் காதலிக்க துவங்கினாள். ஆர்த்தியின் நற்குணங்களால் அவளிடம் வசப்பட துவங்கினான் யாழினியன். தன்னை அறியாமலேயே அவன் அவளை நேசிக்கவும் தொடங்கினான். அவளை கிண்டல் கேலி செய்து, அவளுடன் மேலும் மேலும் நெருக்கமானான். அவளுக்கு கோபமூட்டி ரசித்துப் பார்த்தான். ஏனென்றால் எப்பொழுதெல்லாம் அவளுக்கு அவன் மீது கோபம் வருகிறதோ, அவனை துரத்தி துரத்தி அடிப்பதை அவள் வழக்கமாய் கொண்டிருந்தாள். பொதுவாய், மற்றவர் முன்னிலையில் பெண் பிள்ளையிடம் அடி வாங்குவதை ஆண்கள் விரும்புவதில்லை என்றாலும், இங்கு நிலைமை வேறு. ஆர்த்தி எப்பொழுதெல்லாம் யாழினியனை அடிக்க துரத்துகிறாளோ, அப்பொழுதெல்லாம் அவன் அந்த கல்லூரியின் *சென்டர் ஆஃப் அட்ராக்ஷன்* ஆனான். அந்த கல்லூரியின் மிக அழகான பெண், அவனை துரத்துவதை பார்த்த மற்ற ஆண்கள் அவன் மீது பொறாமை கொண்டார்கள். அது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது அவனை மிகச் சிறப்பானவனாய் உணர வைத்தது.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now