18 நிகழ்காலம்

1K 71 10
                                    

17 நிகழ்காலம்

மீண்டும் எனது விரல்களை சொடுக்கி, நிகழ்காலத்தில் நுழைவதற்கு முன், என்னை ஆசுவாசி படுத்திக்கொள்ள எனக்கு சிறிது நேரம் தேவை. இது மிகவும் வேதனையான விஷயம். இவர்கள் ஏன் இப்படி செய்து விட்டார்கள்? அவர்களுக்கு இடையில் இருந்த மிக உன்னதமான புரிதல் என்னை வியக்க வைத்தது...! எவ்வளவு அழகான ஜோடி அவர்கள்...! தனது காதலை வார்த்தைகளால் கூறாவிட்டாலும், தனது செயலால் அதை எவ்வளவு அழகாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் யாழினியன்...! தன்னிடம் அவனது காதலை வார்த்தைகளால் கூறவிட்டாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், எவ்வளவு ஆழமாய் அவனை காதலித்தாள் ஆர்த்தி...! உண்மையான அன்பின் முன், வார்த்தைகளுக்கு சக்தி இல்லை என்பதை அவர்கள் உணர வைத்திருந்தார்கள்.

ஆனால் இப்போது, அவர்களே வார்த்தைகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதையும் உணர வைத்து விட்டார்கள். யாழினியனின் வார்த்தைகள் ஆர்த்தியின் மனதை கிழித்தது... அவனது வார்த்தைகளை கேட்பதற்காக பல ஆண்டுகளாக காத்திருந்த ஆர்த்தி, அவனுடைய விளையாட்டான பேச்சைக் கேட்டு குலைந்து போனாள்.

ஏன் தனது காதலை அவளிடம் நேரடியாக கூறாமல் போனான் யாழினியன்? தன்னையே அவனுக்காக அவள் அர்பணித்தாளே...! அவள் அவனை எவ்வளவு ஆழமாய் காதலித்திருக்க வேண்டும்...! அவன் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்...! விளையாடுவதற்கு இதுவா நேரம்? அவளை எப்பொழுதும் கேலி கிண்டல் செய்ய மாட்டேன் என்று அவளுக்கு சத்தியம் செய்து கொடுத்திருந்தானே! அவன் அதை எப்படி மறந்தான்? அவனது வாழ்க்கையின் எவ்வளவு முக்கியமான கட்டம் அது...! எவ்வளவு முட்டாள்தனமாய் நடந்து விட்டான்...! தனது காதலை அவளிடம் கூறிவிட்டு, வாழ்க்கை முழுவதும் அவளுடன் விளையாடி இருக்கலாமே...! அவளது மனதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லையா? இது கத்தியின் மீது நடக்கும் சமாச்சாரம் அல்லவா? அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட போது, அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? இதைக் கேட்கவா அவள் இத்தனை வருடமாய் காத்திருந்தாள்? எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறதே...! அவளுடன் எல்லை கடந்த பின், அவளது உணர்வுகளுடன் விளையாடும் தைரியம் எப்படி வந்தது யாழினியனுக்கு? சில வினாடிகளுக்கு தான் என்றாலும், அவை, அவளது காதில் திராவகத்தை வார்த்த வார்த்தைகள் அல்லவா...? யாழினியன்  அப்படிப்பட்ட வார்த்தைகளை கூறியிருக்கக் கூடாது. அதுவும், அவர்களுக்கு இடையில் எல்லாம் நடந்து முடிந்த பின், நிச்சயம் கூறி இருக்கக் கூடாது. ஆர்த்தியும் சில நிமிடங்கள் தாமதித்திருக்கலாம் தான். ஆனால் அவளை நாம் குறை கூறுவதற்கில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகளை யாராலுமே பொறுத்துக் கொள்ள முடியாது.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Où les histoires vivent. Découvrez maintenant