23 புனிதா

1K 76 17
                                    

23 புனிதா

யாழினியனின் இடத்தில் வேறு ஒருவன் இருந்திருந்தால், லண்டன் செல்லும் எண்ணம் நிச்சயம் அவனுக்கு தோன்றியிருக்காது. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்பது தான் பழமொழி. ஆனால் சில சமயம், சாட்சிக்காரன் காலில் விழுவது தான் பலன் அளிக்கும். அதைத் தான் செய்ய நினைத்தான் யாழினியன்.
பிடிவாதம் பிடிக்கும் சினேகாவிடம் போராடிக்கொண்டிருப்பதை விட லண்டன் செல்வதே மேல் அல்லவா?

யாழினியனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. அது ஆர்த்தியின் நிலைப்பாடு. அவனுக்கு ஆர்த்தியை பற்றி நன்றாகவே தெரியும். சொல்லப் போனால், ஆர்த்தியை பற்றி அவனுக்கு மட்டும் தான் தெரியும். அவனைப் போல் ஆர்த்தியை யாரும் புரிந்து கொண்டதில்லை... அவளுடைய அப்பா கூட இல்லை. அதை ஆர்த்தியே அவனிடம் பலமுறை கூறியிருக்கிறாள். நேரமின்மை காரணமாய் வெங்கட்ரராகவனால் ஆர்த்திக்கு என்று நேரத்தை ஒதுக்கவே முடிந்ததில்லை. கோடை விடுமுறையில் கூட அவள் தனியாகத் தான் இருந்திருக்கிறாள். தொலைபேசி அழைப்புகள் அப்பா, மகளுக்கு இடையில் ஒரு உணர்வுபூர்வமான உறவை ஏற்ப்படுத்த உதவவில்லை. (இப்பொழுது இருப்பது போல், கைபேசிகள் அந்த அளவிற்கு மனித வாழ்வை அப்பொழுது ஆக்கிரமித்து இருக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்) யாழினியன் ஒருவன் தான் ஆர்த்தியின் வாழ்வில் இன்றியமையாத இடத்தை பிடித்தவன். பள்ளி முதல், கல்லூரி வரை மிக நீண்ட பயண தூரத்தை அவள் வாழ்வில் ஆக்கிரமித்தவன் யாழினியன் தான். அவளுடைய ஒவ்வொரு விருப்பு, வெறுப்புகளும் அவனுக்கு அத்துபடி. அவளை கேலி, கிண்டல் செய்து இருக்கிறானே தவிர, அவளை காயப்படுத்த வேண்டும் என்று அவன் எப்பொழுதும் முனைந்ததில்லை. ஆரத்தி அவன் மீது கொண்டிருந்த காதலின் ஆழத்தை பற்றி நாம் கூற வேண்டிய அவசியமில்லை. இவற்றையெல்லாம் கூட்டி கழித்து பார்க்கும் பொழுது, ஆர்த்தியால் யாழினியனை இந்த அளவிற்கு வெறுக்கவும், ஒதுக்கவும் முடியுமா? அந்த ஒரு எண்ணம் தான் அவனை லண்டன் நோக்கி பறக்கச் செய்தது. ஒருவேளை இவள் ஆர்த்தியாக இருந்தால், ஒரு முக்கியமான நபர் அவளுடன் இருக்க வேண்டும்... அவளுடைய அப்பா வெங்கட்ரராகவன்.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now