4 வாழ்நாள் விருப்பம்

1.8K 74 17
                                    

4 வாழ்நாள் விருப்பம்

நினைவலைகள் தொடர்கிறது...

யாழினியனும், மகேந்திரனும் சிமெண்ட் பென்சில் அமர்ந்து தங்கள் பாடத்தை பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தார்கள். யாழினியனை லேசாய் இடித்து, நிமிர்ந்து பார் என்று சைகை செய்தான் மகேந்திரன். தலையை நிமிர்த்தி பார்த்தவன் அங்கு ஒரு பெண் குழைவாய் சிரித்தபடி  நின்று கொண்டிருப்பதை கண்டான். அவள் கணித பாடப்பிரிவை சேர்ந்த சம்யுக்தா.

"என்ன?" என்றான் யாழினியன்.

"நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள் சம்யுக்தா.

வெறுப்புடன் தன் தலையை சொரிந்தான் மகேந்திரன். அவன் அங்கிருந்து செல்ல முற்பட்ட போது, அவன் தோளை சுற்றி வளைத்துக் கொண்டு,

"இங்கேயே சொல்லு" என்றான் யாழினியன்.

"அது... வந்து..." என்று அவள் தடுமாற,

மகேந்திரன் கொட்டாவி விட்டான்.

"என்ன விஷயம்?" என்றான் யாழினியன்.

"நான் உன்னை காதலிக்கிறேன்" என்றாள் சம்யுக்தா.

"ஓஹோ... "

அவனது ஆர்வம் இன்மையை பார்த்து,

"நான் உன்னை ரொம்ப டீப்பா லவ் பண்றேன்... உன்னை பார்த்த நாளிலிருந்து..."

"எனக்காக எவ்வளவு நாள் காத்திருப்ப?"

"லைஃப் லாங் காத்திருக்க தயாரா இருக்கேன்"

"அப்படின்னா, எட்டு வருஷம் கழிச்சு வா"

"எட்டு வருஷமா? ஆனா ஏன்?"

"நம்ம இப்ப தான் லெவன்த் படிக்கிறோம். நான் மெடிசன் முடிக்க எட்டு வருஷம் ஆகும். அப்பவும் நீ என்னை காதலிச்சுக்கிட்டே இருந்தா, நிச்சயம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்"

"நான் நிச்சயம் காத்திருப்பேன். நம்ம இப்போ கமிட் ஆகலாம்"

"அதான் எனக்காக காத்திருக்கேன்னு சொல்றியே, அப்புறம் எதுக்கு கமிட் ஆகணும்?"

"இல்ல, அதுக்கு சொல்லல..."

"வேற எதுக்கு?"

"ஒன்னும் இல்ல..." அவள் அங்கிருந்து விரக்தியுடன் சென்றாள் சம்யுக்தா.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Donde viven las historias. Descúbrelo ahora