11 ஏன்?

1.1K 62 14
                                    

11 ஏன்?

அது ஒரு கார்டியோ செமினார். அதில் ஆர்த்தியும் ஒரு பிரசன்டேஷன் தர இருந்தாள். அவளைவிட அவரது நண்பர்கள் மிகவும் சந்தோஷமாய் இருந்தார்கள். அவர்களுக்கு தெரியாதா, ஒரு பாடத்தை எளிமையாய் விளக்கிக் கூறுவதில் அவள் எவ்வளவு கை தேர்ந்தவள் என்று...! அன்று நடைபெற இருக்கும் செமினாரில் அவள் தான் கதாநாயகியாக திகழப் போகிறாள் என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. அவளுடைய வருகைக்காக அனைவரும் காத்திருந்தார்கள்.

ஆனால், யாழினியனோ எரிச்சலுடன் காணப்பட்டான். அவளிடம் சந்தேகம் கேட்கிறேன் பேர்வழி என்று மாணவர்கள் அவளை சூழ்ந்து கொள்ளப் போகிறார்கள். அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகவும் ஆர்வம் அதிகம் என்பதால், அவளும் இன்று முழுதும் பிஸியாகவே இருக்கப் போகிறாள். இன்று அவளிடம் பேசக்கூட அவனுக்கு நேரம் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவள் எங்கே? இன்று ஏன் அவள் இவ்வளவு காலதாமதமாய் வருகிறாள்? சாதாரண தேர்வுக்கே அரை மணி நேரம் முன்னதாக வந்துவிடும் அவள், இவ்வளவு முக்கியமான செமினார் இருக்கும் போது, காலதாமதம் செய்ய காரணம் என்ன? அவளைப் போலவே செமினார் வழங்க தேர்வு செய்யப்பட்ட மற்ற மாணவர்கள், கடமை உணர்ச்சியோடு, விழுந்து விழுந்து பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆர்த்திக்கு கடைசி நேரத்தில் பயிற்சி செய்வது சுத்தமாய் பிடிக்காது. அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடிப்பவள் அவள். இன்றைக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் அவள் நேற்றே செய்து முடித்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சற்று முன்கூட்டியே வந்து விட்டால், சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, பின் செமினாருக்கு செல்லலாம் அல்லவா...?

சட்டென்று, கல்லூரி வளாகம் அமைதியாகி போனது. புத்தம் புதிய தோற்றத்தில் உள்ளே நுழைந்தாள் ஆர்த்தி. முழங்காலுக்கு கீழே ஓடிய, கருப்பு நிற பென்சில்-ஃபிட் ஸ்கர்ட்டும், வெள்ளை நிற சட்டையும், அதற்கு மேல் கருப்பு நிற கோட்டும் அவளுக்கு அவ்வளவு சிக்கென்று  பொருந்தியது. தனது பட்டு கூந்தலை ஒரு பக்கம் மட்டும் கிளிப் செய்யப்பட்டு, காற்றில் அலையாட விட்டுக்கொண்டு வந்தாள். அது அங்கிருந்த அனைவரையும், அவள் பக்கம் திரும்பச் சொல்லி கட்டளையிட்டது. அவள் அணிந்திருந்த முத்து தொங்கட்டானும், அதற்கு பொருத்தமாய் தலையில் அணிந்திருந்த முத்தினால் ஆன கிளிப்பும், மிக பாந்தமான அழகை தந்தது.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now