53 நேருக்கு நேர்

919 57 10
                                    

53 நேருக்கு நேர்

தன் அம்மாவை ரத்த வெள்ளத்தில் பார்த்த சினேகா, மலைத்து நின்றாள். தான் சுட்டது தன் அம்மாவை தான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை... நம்பித்தான் தீர வேண்டும். அவள் சுட்டது, யாருடைய துணையும் இல்லாமல், அவளை அரும்பாடு பட்டு வளர்த்த அவளது அம்மாவை தான்.

புனிதா இன்னும் உயிரோடு தான் இருக்கிறார் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், அவரை தன் கண்ணெதிரே கண்ட பிறகு நம்பாமல் எப்படி இருப்பது? தன் கண்களை திறந்து வைக்க புனிதா கடினப்பட்டு முயன்று கொண்டிருந்தார். பாவம் அந்த பெண்மணி... இன்னும் எவ்வளவு  துயரங்களை தான் வாழ்வில் அனுபவிப்பாரோ...

தன்னை சுதாகரித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடிச் சென்ற சினேகா,

"அம்மா..." என்று முணுமுணுத்தாள்.

"என்னை அம்மானு கூப்பிடாத... நீ என் பொண்ணே இல்ல. உன்னை பெத்ததுக்கு நான் ரொம்ப வெட்கப்படுறேன். உன்னோட கீழ்த்தரமான நடத்தையால, நீ என்னையும், என் வளர்ப்பையும் கேவலப்படுத்திட்ட. நீ இப்படி எல்லாம் செய்வேன்னு தெரிஞ்சிருந்தா, உன்னை கருவுலேயே அழிச்சிருப்பேன். நீ வாழ தகுதியே இல்லாதவ. என் கண்ணு முன்னாடியே நிக்காத" என்றார் நீண்ட மூச்சுக்களுக்கு இடையே.

"அம்மா, ப்ளீஸ் பேசாதீங்க... யாழ் சீக்கிரமா ஏதாவது செய்" என்றாள் ஆர்த்தி.

அவரை தன் கரங்களில் அள்ளிக் கொண்டு, விருந்தினர் அறையை நோக்கி ஓடினான் யாழினியன்,

"ஆர்த்தி, என்னோட மெடிக்கல் கிட்டை கொண்டு வா" என்று கூறியபடி.

அவனுடைய முதலுதவி பெட்டியை கொண்டு வர, தங்கள் அறையை நோக்கி ஓடினாள் ஆர்த்தி. புனிதாவின் வயிற்றில் பாய்ந்த குண்டை வெளியில் எடுக்க, யாழினியனுக்கு உதவ, கதிரவனும், நிலவனும் தயாரானார்கள். மகேந்திரன் மட்டும் சினேகாவை கவனித்த வண்ணம், வரவேற்பறையிலேயே இருந்துவிட்டான். அவளை விட்டு நகர அவன் தயாராக இல்லை.

குழந்தைகள் அனைவரையும் பாட்டியும், சித்தியும் தன் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Tahanan ng mga kuwento. Tumuklas ngayon