31 ஒரே முகம் கொண்ட அரக்கி

1K 69 9
                                    

31 ஒரே முகம் கொண்ட அரக்கி

வெகு நாட்களுக்குப் பிறகு, தன் மனதில் ஆழமாய் ஏதோ உணர்ந்தாள் ஆரத்தி... வெகு காலமாய் அவள் எதிர்பார்த்து இருந்த உணர்வு அது. சீக்கிரமே யாரினியனை சந்திப்போம் என்ற எண்ணத்தை அந்த உணர்வு அவளுக்கு தந்தது. கண்ணீர் சிந்திய படி சுவற்றில் சாய்ந்தாள். தனது வாழ்வை புரட்டி போட்ட, அந்த மோசமான நிகழ்வை, நினைத்துப் பார்ப்பதையே அவள் நிறுத்தி விட்டிருந்தாள். ஆனால் இப்போது அவளால் அதை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

அன்று...

"நான் சொல்ல போறதில்ல... நமக்குள்ள இவ்வளவு நடந்ததுக்கு பிறகு, நிச்சயம் சொல்ல போறதில்ல." என்று யாழினியின் கூறியதை கேட்டு, அந்த இடத்தை விட்டு சென்ற பிறகு...

யாழினியன் மீது அவ்வளவு கோபமாக இருந்தாள் ஆர்த்தி... என்றும் இல்லாத அளவிற்கு கோபம். அவளை கிண்டல் செய்யாமல் இருக்க முடியாதா, அவனால்? எப்பொழுது தான் அவன் விளையாடாமல் சீரியஸாய் இருக்கப் போகிறான்? அவர்களுக்கு இடையில் இவ்வளவு தூரம் நடந்ததற்கு பிறகு, எப்படி அவனால் எவ்வளவு வேடிக்கையாய் இருக்க முடிகிறது? சீரியஸாய் இருப்பதென்றால் என்னவென்று அவனுக்கு காட்டியாக வேண்டும். வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அளவிற்கு, அவனுக்கு ஒரு படத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள் ஆர்த்தி. அவளிடம் விளையாட வேண்டும் என்பதையே அவன் அடியோடு மறக்க வேண்டும், என்று எண்ணியபடி தன் அறைக்கு வந்தாள் ஆர்த்தி. இரண்டு நாளுக்கு முன்னால், தபாலில் வந்த தன் தோழியின் திருமண பத்திரிகை அவள் கண்ணில் பட்டது. தனது அப்பா வெங்கட்ரகவனுக்கு ஃபோன் செய்தாள்.

"ஆர்த்தி... பிரேசில் வர ரெடி ஆயிட்டியா?"

"இல்ல, டாட், நான் இப்ப பிரேசில் வரல"

"ஏன்? என்ன ஆச்சு?"

"இப்போதைக்கு என்னை எதுவும் கேட்காதீங்க. அந்த பைத்தியக்காரனுக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்துட்டு தான் நான் வருவேன்" என்றாள் கோபமாக.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now