43 பாதுகாப்பில்லா உணர்வு

927 64 11
                                    

43 பாதுகாப்பில்லாத உணர்வு

அழகு நிலையத்திலிருந்து வந்த ஆர்த்தியின் முகத்தைப் பற்றி, இடம் வலமாய் திருப்பி பார்த்த யாழினியன்,

"எனக்கு எந்த வித்தியாசமும் தெரியல" என்றான்.

"ஆஃப் அன் ஹவர்ல, என்னுடைய ஃபேஸ் ஒன்னும் மிஸ் யூனிவர்ஸ் மாதிரி மாறிடாது..." என்றாள் சிரித்தபடி.

"நீ நார்மலாவே அழகுதான்னு நான் தான் சொல்றேனே..."

"ஆமாம் சொன்ன..."

"அப்புறம் எதுக்கு பார்லருக்கெல்லாம் போற?"

"அதைப் பத்தி நம்ம அப்புறமா டிஸ்கஸ் பண்ணலாம். இப்போ கிளம்பலாமா?"

"எல்லாரும் ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்க"

"நம்மளும் போகலாம். நான் மமதியை பாக்கணும்"

"சரி" என்றபடி மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான் யாழினியன்.

வெகுவேகமாய் குணமாகிக் கொண்டிருந்தாள் மமதி. *பெயின் கில்லர்* மருந்துகள் அவளது வலியை கொன்று, அவளை வலியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஆர்த்தியை பார்த்தவுடன் புன்னகை புரிந்தாள் மமதி, அவளை சினேகா என்று எண்ணி.

"எப்படி இருக்க டா செல்லம்?" என்றாள் ஆர்த்தி.

"நல்லா இருக்கேன். தேங்க்யூ"

"எதுக்கு தேங்க்ஸ்?"

அவளது தோளை பிடித்து லேசாய் அழுத்தினான் யாழினியன். ஒன்றும் புரியாமல் அவனைப் பார்த்தாள் ஆர்த்தி.

"அம்மா, நீங்க தானே அவளுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேஷன் பண்ணிங்க? அதுக்காக தான் அவ உங்களுக்கு தேங்க்ஸ் சொல்றா" என்றாள் தியா.

அப்பொழுது தான், அவள் தனக்கு நன்றி சொன்ன காரணம் புரிந்தது ஆர்த்திக்கு.

"உன்னோட தேங்க்ஸ், யாரெல்லாம் சேர்ந்து இந்த ஆபரேஷனை பண்ணாங்களோ, அந்த எல்லா டாக்டர்ஸ்க்கும் போய் சேரும்" என்றாள் ஆர்த்தி.

"நீங்க எனக்கு சாக்லேட் தருவீங்க தானே?" என்றாள் மமதி.

"நிச்சயமா தரேன். நீ சீக்கிரமா குணமாயிட்டு வந்துடு... நம்ம மூணு பேரும் சேர்ந்து நிறைய சாக்லேட் சாப்பிடலாம்" என்றாள் தியாவை பார்த்தபடி.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now