50 பதற்றம்

888 65 9
                                    

50 பதற்றம்

 நான்கு ஆண்டுகளுக்குப் பின்,

தனது வெள்ளை நிற கோட்டை, ஸ்டாண்ட்டில் மாட்டிவிட்டு, அக்கடா என்று அமர்ந்தாள் ஆர்த்தி. இன்டர்காமை எடுத்து பேசிய யாழினியன்,

"நாங்க வந்துட்டோம்" என்றான்.

"வரேன் பா" என்றாள் தியா.

சில நிமிடங்களில், பழத்தட்டுடன் வந்தாள் தியா.

"குட் கேர்ள்" என்றான் யாழினியன்.

"இந்தாங்க மா. இதை சாப்பிடுங்க" என்று அதை ஆர்த்தியிடம் கொடுத்தாள் தியா.

"தேங்க் யு செல்லம்"

"இன்னைக்கு ஆபரேஷன் எப்படி நடந்தது?"

"கொஞ்சம் கிரிட்டிக்கல் தான்"

"கஷ்டமா தானே இருந்திருக்கும்... பேஷன்ட், ரெண்டு வயசு குழந்தையாச்சே..." என்றாள் தியா.

"ஆமாம், அதனால தான் நிறைய டைம் எடுத்துச்சு"

"ஆனா, அதை நீங்க சக்சஸ்ஃபுல்லா முடிச்சிருப்பிங்க. கரெக்ட் தானே?"

" கரெக்ட்"

"இதை சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்துக்கோங்க. பாக்க டையர்டா இருக்கீங்க" என்ற தியாவின் கன்னம் தொட்டு, சரி என்று தலையசைத்தாள் ஆர்த்தி.

"அப்பா, நானும், மமதியும், அத்தை கூட ஷாப்பிங் போறோம்"

"என்ன ஷாப்பிங்?" என்றாள் ஆர்த்தி.

"சும்மா தான் மா"

"சரி அதுக்கு?" என்றான் யாழினியன்.

"நான் வர்ற வரைக்கும் அம்மாவை பார்த்துக்கோங்க"

"சரிங்க"

ஆர்த்தி சிரிக்க அங்கிருந்து ஓடி சென்றாள் தியா.

"பெரிய பொண்ணு மாதிரி பேசிட்டு போறா பாரு" என்றான் யாழினியன்.

"அது உன்னால தான்... எல்லாத்துலயும் அவளுக்கு பிரியாரிட்டி கொடுத்து, நீ தான் அவளை பெரிய பொண்ணு மாதிரி ஃபீல் பண்ண வச்ச"

"அதுல என்ன தப்பு இருக்கு? அவ பொறுப்பான பொண்ணு"

"அதனால தான் அவ உனக்கு ஆர்டர் பண்ணிட்டு போறா"

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now