38 நிகழ்காலம் ஒன்றே நிலையானது

1K 69 7
                                    

38 நிகழ்காலம் ஒன்றே நிலையானது

ஆர்த்தியிடம் அடி வாங்கிக் கொண்டு குனிந்த படி அப்படியே நின்றான் யாழினியன். சற்று நேரம் அடி வாங்கிய பின், அவளது இடையை சுற்றிவளைத்துக் கொண்டான். அவனை அடிப்பதை நிறுத்தினாள் ஆரத்தி. நிமிர்ந்து நின்றவனின் கண்கள் கலங்கி இருந்ததை பார்த்து, அவனை இருக்கமாய் அணைத்துக் கொண்டாள் அவள்.

"ஐ மிஸ்டு யூ..." என்று தானும் அவளை அணைத்துக் கொண்டான்.

சோபாவில் அமர்ந்து, ஆர்த்தியை தன் அருகில் அமர்த்திக் கொண்டான். அவனது தோளில் சாய்ந்த ஆர்த்தி,

"நான் ஒவ்வொரு நிமிஷமும் உன்னை தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன் தெரியுமா... முக்கியமா நான் கேரிங்கா இருந்த போது..." என்றாள்.

அவளது கரத்தைப் பற்றி முத்தமிட்டு,

"ஐ அம் ரியலி சாரி..." என்றான்.

"போனதெல்லாம் போகட்டும், விடு யாழ். என் வாழ்க்கையோட மோசமான அந்த நாட்களை பத்தியெல்லாம் நான் யோசிக்கக்கூட விரும்பல."

"நம்ம வாழ்க்கையில நடந்ததெல்லாம், கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத ஒன்னு... ஒரு பொம்பளைக்கு இவ்வளவு தைரியம் இருக்கும்னு என்னால நம்பவே முடியல"

"அவ என்ன வேணா செய்யக் கூடியவ தான்... ஏன்னா, அவ பொம்பளையே இல்ல... அவ ஒரு ராட்சசி... இதயம் இல்லாதவ... நம்ம கற்பனைக்கு எட்டாத அளவுக்கு... அவளை பொறுத்த வரைக்கும், இதயம்ங்கறது சதையாலான ஒரு உறுப்பு. ஃபீலிங்ஸ்சோ, எமோஷன்ஸ்சோ கிடையாது... இதயங்களை அறுத்து, அறுத்து அவ இதயம் இல்லாதவளா ஆயிட்டா..."

"அவளுக்கு சரியான தண்டனை நிச்சயம் கிடைக்கும்" என்றான் யாழினியன்.

"ம்ம்ம்"

"ஆர்த்தி... "

"ம்ம்ம்?"

"கல்யாணம் பண்ணிக்கலாம்"

"பண்ணிக்கலாம்..."

"நாளைக்கு..."

அவனது தோளிலிருந்து தலையை உயர்த்திய ஆர்த்தி,

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now