20 ஒருவேளை இல்லாவிட்டால்?

1K 69 13
                                    

20 ஒருவேளை இல்லாவிட்டால்...?

தனது அறைக்கு வந்த யாழினியன், தனது மடிக்கணினியை ஆன் செய்து, ஐ ஏ எஸ் அதிகாரியான வெங்கட்ரகவனை பற்றிய விவரங்களை தேடினான். அவர் பணியாற்றிக் கொண்டிருந்தவரை, அவரைப் பற்றிய அனைத்து விவரங்களும் இருந்தது. ஆனால், அவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின், அவர் என்ன ஆனார் என்ற  எந்த விவரமும் இல்லை. அவருடைய பழைய எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றான். ஆனால் அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

*எதுக்காக என்னை இப்படி டார்ச்சர் பண்ற ஆரத்தி? நீ தான் ஆரத்தின்னு ஏன் ஒத்துக்க மாட்டேங்குற? நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்குற? நான் ஒத்துக்குறேன், நான் செஞ்சது தப்பு தான். நான் உன்னை கிண்டல் பண்ணி இருக்கக் கூடாது. ஆனா உனக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கணும்னு தான் நான் அப்படி செஞ்சேன். உன்னைத் தவிர வேற யாரால என்னை புரிஞ்சுக்க முடியும்?  ஆனா, நீயே இவ்வளவு பிடிவாதமா என்னை சித்திரவதை செஞ்சுகிட்டு இருந்தா, உன்னுடைய காதலுக்கு என்ன வேல்யூ இருக்கு? இத்தனை வருஷம் கழிச்சும் நான் ஒண்டிக்கட்டையா வாழறதை பார்த்து கூடவா, நான் இன்னும் உன்னை தான் நினைச்சுக்கிட்டு, உனக்காகத் தான் காத்துக்கிட்டு இருக்கேன்னு உனக்கு புரியலயா? நான் ஒரு ஏமாத்துக்காரனாக இருந்திருந்தா, இந்நேரம் நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேனா? என்கிட்ட திரும்பி வந்துடு ஆர்த்தி. நீ வணங்குற கடவுள் உண்மையா இருந்தா, உன்னை உண்மையை ஒத்துக்க வைக்கட்டும்* எனது என்று மனதிற்குள் வேதனை பட்டான் யாழினியன்.

யாழ் மருத்துவமனை

யாழ் மருத்துவமனையில் இருந்த உபகரணங்கள் சினேகாவுக்கு திருப்தி அளித்தது. அவள் மமதியை முழுமையாய் சோதனையிட்டு முடித்தாள்.

"உனக்கு ஒண்ணுமில்ல.  நீ நல்லா இருக்க" என்றாள் சினேகா.

"அப்படின்னா, எனக்கு ஆபரேஷன் வேண்டாமா?" என்றாள் மமதி ஆர்வமாய் .

"வேணுமே..." என்றாள் சோகமாய்.

மமதியின் முகம் வாடிப் போனது.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now