15 பாதுகாப்பற்ற உணர்வு

1K 66 15
                                    

15 பாதுகாப்பற்ற உணர்வு

மறுநாள்

ஆர்த்தி தனக்கு ஃபோன் செய்யவில்லை என்பதால் ஏற்பட்ட கோபத்துடன் அவளுக்காக காத்திருந்தான் யாழினியன். அப்பொழுது ரோஷன் அவனை ஒரு கள்ள புன்னகையுடன் கடந்து சென்றான். அது அவனது கோபத்தை கொளுந்து விட்டு எரியச் செய்தது. அவன் தோளை பற்றி அழுத்தினான் மகேந்திரன். யாழினியன் அவனை திரும்பி பார்க்க, தன் கண்களை இமைத்து, அமைதியாய் இரு என்றான்  மகேந்திரன்.

அன்று சற்று தாமதமாய் வந்த ஆர்த்தி, அவள் பணிபுரிய வேண்டிய மருத்துவ பிரிவை நோக்கி விரைந்தாள். கோபத்துடன் அவளை வழிமறித்தான் யாழினியன்.

"ஹாய்" என்றாள் ஆர்த்தி.

"உனக்கு இப்ப தான் என் ஞாபகம் வருதா?"

"அப்படி ஒன்னும் இல்லயே..."

"எதுக்காக நேத்து ராத்திரி எனக்கு நீ ஃபோன் பண்ணல?"

"எனக்கு நேரமே கிடைக்கல..."

"அவ்வளவு பிஸியா இருந்தியா?"

"ஆமாம். ரொம்ப பிஸி... உனக்கு தான் தெரியுமே..."

"ஆமாம், நீ ஏன் பிஸியா இருந்தேன்னு எனக்கு தெரியும். ரோஷன் கூடவும், அவங்க ஃபேமிலியோடவும் இருந்ததுல உனக்கு டைம் போனதே தெரிஞ்சிருக்காது..."

அவன் பேசி முடிக்கட்டும் என்று அவனை பார்த்தபடி நின்றிருந்தாள் ஆர்த்தி.

"என்னை மறக்குற அளவுக்கு அப்படி என்ன சொன்னான் அவன்? எனக்கு ஃபோன் பண்ணணும்னு கூட உனக்கு தோணலையா? எப்படி உன்னால அப்படி இருக்க முடிஞ்சது? எப்படி நீ என்னை மறந்த? சொல்லு ஆர்த்தி..."

"ஆமாம், நான் உன்னை மறந்தேன். ஆனா அதுக்கு காரணம் ரோஷன் இல்ல. என்னோட அப்பா. அவரோட ஃபிளைட் டிலே ஆயிடுச்சு. அதனால அவர், நான் அவர் கூட இருக்கணும்னு நினைச்சாரு. நான் எவ்வளவு நாள் கழிச்சு எங்க அப்பாவை பார்க்கிறேன்னு உனக்கு தான் தெரியுமே... அவர் இன்னும் ரெண்டு நாள்ல பிரேசில் போறாரு. அதனால, கிடைச்ச டைமை அவர் கூட ஸ்பென்ட் பண்ணேன். எவ்வளவோ விஷயங்கள் பேசினோம்... அதுல டைம் போனது தெரியல தான்... ஆனா நீ நினைக்கிற மாதிரி இல்ல. புரிஞ்சுதா உனக்கு?"

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now