45 திட்டம்

899 64 10
                                    

45 திட்டம் 

மயங்கி விழுந்த சினேகா, மக்களால் சூழ்ந்து கொள்ளப்பட்டாள். அவளது முகத்தில், யாரோ ஒருவர் தண்ணீர் தெளித்தார். ஆனாலும் அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவளை பின்தொடர்ந்து வந்த சிந்து, சற்று தூரத்தில் நின்று, நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தாள். சினேகா தன் மொத்த சக்தியையும் இழந்து விட்டது போல் தெரிந்தது.

அந்த பக்கம் ரோந்து சென்ற போலீசார், வண்டியை நிறுத்தி, மயங்கி விழுந்திருந்த சினேகாவை பற்றி விசாரித்தார்கள். தனது கைபேசியை எடுத்து, யாழினியனுக்கு ஃபோன் செய்தாள் சிந்து.

"சொல்லுங்க மேடம், ஏதாவது பிரச்சனையா?" என்றான் யாழினியன்.

"சினேகா மயங்கி விழுந்துட்டா சார். அவளைப் பத்தி போலீஸ் என்கொயரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு மட்டும் அவ யாருன்னு அடையாளம் தெரிஞ்சிட்டா, அவங்க நிச்சயம் அவளை அரெஸ்ட் பண்ணிடுவாங்க. என்ன செய்யறதுன்னு நீங்க தான் சார் சொல்லணும்"

"போலீஸ் அவளை அரெஸ்ட் பண்ணட்டும்" என்றான் யாழினியன். 

"நிச்சயமா தான் சொல்றீங்களா சார்?"

"ஆமாம். அப்படி நடக்க, வேண்டியதை செய்ங்க"

" ஓகே சார்"

அழைப்பை துண்டித்து விட்டு, அங்கிருந்த மக்களுடன் கலந்த சிந்து,

"இவளை பார்க்க டாக்டர் சினேகா மாதிரியே இருக்கே" என்றாள் இன்ஸ்பெக்டரின் காதில் விழும் படி.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் துணுக்குற்றார்.

"நிச்சயமா தெரியுமா உனக்கு?"

"அப்படி தான் சார் நினைக்கிறேன். ஒரு தடவை தான் நான் இவளை பார்த்திருக்கேன்" என்றாள் சிந்து.

"என்னோட ஃபோனை ஜீப்பில் இருந்து கொண்டு வாங்க" என்று கான்ஸ்டபிலுக்கு உத்தரவிட்டார் இன்ஸ்பெக்டர்.

 அவரது கைபேசி அவரது கைக்கு வந்தவுடன், அதில் தனக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டிருந்த சினேகாவின் புகைப்படத்தை தேடினார். அவரிடம் இருந்த புகைப்படம் அங்கிருந்த பெண்ணின் முகத்துடன் ஒத்து போனது. ஆம் என்று தலையசைத்த அவர், தன்னுடன் வந்திருந்த பெண் கான்ஸ்டபிளை அழைத்தார்.

மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️ Where stories live. Discover now