72 உண்மை

482 47 8
                                    

72 உண்மை

கைபேசியை கையில் பிடித்த வண்ணம் அதிர்ச்சியோடு நின்றாள் நித்திலா.

அந்த கைபேசி அழைப்புக்கு என்ன அர்த்தம்? அந்த அழைப்பை பொறுத்தவரை, டாக்டரின் மரணத்திற்கு அதில் பேசிய மனிதன் தான் காரணம். அப்படி என்றால், அவன் எதற்காக சித்திரவேலுக்கு ஃபோன் செய்து, அவனை அமைதியாய் இருக்க சொல்லி கூற வேண்டும்? அதில் சித்திரவேலும் உடந்தையா? அவனும் உடந்தை என்றால், அந்த மோசமான மருந்தில் இவனது பங்கு இருக்கிறதா? அந்த மருந்தை பற்றி ஏற்கனவே சித்திரவேலுக்கு தெரியுமா? அதை இனியவனுக்கு கொடுத்தது அவன் தானா? ஆனால் எதற்காக அவன் இதையெல்லாம் செய்தான்? அப்படி என்றால், தான் நல்லவன் என்று அவன் காட்டிக் கொள்வதெல்லாம் உண்மை இல்லையா? மற்றவருக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லையா? எல்லாமே நடிப்பு தானா? அவன் ஏமாற்றுக்காரனா?

நித்திலாவின் கரங்கள் நடுங்கின. அவளது கண்கள் கட்டுக்கடங்காமல் பொழிந்தது. அவளது இதயம் உடைந்து விடும் அளவிற்கு அடித்துக்கொண்டது. அவளுக்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது. அவள் கண்கள் இருண்டது. தன் கையில் இருந்த கைபேசியை நிழுவ விட்டு, மயங்கி விழுந்தாள். அந்த உண்மையை அவளால் தாங்க முடியவில்லை.

குளியலறை விட்டு வெளியே வந்த சித்திரவேல், அவள் அசைவற்று தரையில் விழுந்து கிடந்ததை பார்த்து,

"நித்...தி..." என்று கத்தியது அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.

அப்பொழுது தான் வரவேற்பறைக்கு வந்த ஆழ்வி, அதை கேட்டு நின்றாள். தன் அறைக்குச் சென்ற பார்கவியும், அவன் அலறலை கேட்டு திடுக்கிட்டாள். கால தாமதம் செய்யாமல் பாட்டி அவள் அறையை நோக்கி ஓடினார். பாட்டியை தாண்டிக் கொண்டு ஆழ்வியும் பார்கவியும் ஓடினார்கள். சித்திரவேல், மயங்கி கிடந்த நித்திலாவே கட்டிலில் படுக்க வைப்பதை அவர்கள் கவனித்தார்கள்.

"நித்திலாவுக்கு என்ன ஆச்சு?" என்றார் பாட்டி.

"தெரியல பாட்டி. நான் இப்ப தான் பாத்ரூமில் இருந்து வந்தேன். இவள் கீழே மயங்கி கிடந்தா..."

You've reached the end of published parts.

⏰ Last updated: 3 days ago ⏰

Add this story to your Library to get notified about new parts!

நீயின்றி அமையாது (என்) உலகு...!Where stories live. Discover now