68 சடங்கு

780 51 14
                                    

68 சடங்கு

ஆழ்வியை அனைத்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தான் இனியவன், ஆழ்வியையும் சேர்த்து. என்ன மனிதன் இவன்? இவனது பாழாய் போன மனதில் என்ன தான் இருக்கிறது? இவன் எப்பொழுது என்ன செய்வான் என்று யாருக்கும் புரிவதில்லை. இப்பொழுது அவளை அணைத்ததற்கு என்ன காரணம் கூற போகிறானோ தெரியவில்லை.

அந்த அணைப்பில் இருந்து தன்னை பின்னோக்கி இழுத்தான் இனியவன். ஆனால் ஆழ்வியை தன் அணைப்பிலிருந்து விடுவிக்கவில்லை. அவனது கரங்கள் அவளை சுற்றி வளைத்த வண்ணமே இருந்தன.

"தேங்க்ஸ், ஆழ்வி. நீ எனக்காக என்னெல்லாம் செஞ்சியோ எல்லாத்துக்கும் தேங்க்ஸ். எனக்கு தேங்க்ஸ் அப்படிங்கிற வார்த்தையை தவிர வேற எந்த வார்த்தையும் கிடைக்கல. உன் மதிப்பு என்னன்னு நான் தெரிஞ்சுகிட்டேன்.  நீ எனக்காக செஞ்சதையெல்லாம் வேற யாராலையும் செய்ய முடியாதுன்னு நான் இப்ப தான் புரிஞ்சுகிட்டேன். நீ கொண்டாடப்பட வேண்டியவ. இவ்வளவு நாளா உன்னை நான் புரிஞ்சுக்காம இருந்ததுக்காக என்னை மன்னிச்சிடு. விஷயத்தோட சீரியஸ்னஸ்ஸை புரிஞ்சிக்காம இருந்ததுக்காக ஐ அம் சாரி. இதெல்லாம் எனக்கு முன்னாடியே புரிஞ்சிருந்தா, உன்னை வைஃபா ஏத்துக்க மாட்டேன்னு சொல்லியிருக்க மாட்டேன்" ஒரே மூச்சில் கூறி முடித்தான் இனியவன்.

ஆழ்வி திடுக்கிட்டாள். அப்படி என்றால், அனைவரின் முன்னிலையிலும் அவளை மனைவியாக ஏற்க தயாராகி விட்டானா இனியவன்? அவனது முக பாவத்தை அவள் கவனித்துக் கொண்டிருந்த அதே வேளையில், அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கித் திளைத்தார்கள்.

சித்திரவேலோ பெயர் கூற முடியாத நிலையில் இருந்தான். இனியவன் ஆழ்வியை தன் மனைவியாய் ஏற்றுக் கொண்டான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. சந்தேகம் இல்லாமல் அதில் அவனுக்கு சந்தோஷம் தான். ஏனென்றால் நித்திலா அவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவாளே! அதே நேரம், அவனுக்கு பயமும் எழுந்தது. இனியவன் மற்றும் ஆழ்வியின் இணைவு அவனுக்கு கொண்டுவர இருப்பது என்ன என்பதை அவனால் யூகிக்க முடியவில்லை.

நீயின்றி அமையாது (என்) உலகு...!Tempat cerita menjadi hidup. Temukan sekarang