அத்தியாயம் 1

13.3K 255 46
                                    

இருள் சூழும் மாலை வேளையில் இனிமையான ஓசைகளை எழுப்பியவாறு தன் இருப்பிடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த பல வகையான பறவைகளையும், தன்னை சுற்றி எங்கும் கண்களுக்கு, குளிர்ச்சியாக இருந்த நெற்கதிர்களையும் வேடிக்கை பார்த்தவாறு வந்தாள் ஆராதனா.

ஆராதனா - வாசுதேவன்,செண்பகம் தம்பதியின் ஒரே செல்ல புதல்வி, தனது கல்லூரிப் படிப்பை முடித்து பாட்டி, தாத்தாவை காண்பதற்காக மகிழ்ச்சியுடன் தாய், தந்தையுடன் வந்து கொண்டிருந்தாள்.

பழங்காலத்தில் கட்டப்பட்டு இன்றும் புதுமை போல் இருக்கும் அந்த மாளிகையில் முன்பு அவர்களது கார் நின்றது .

காரினை விட்டு வெளியே இறங்கியவள் தனது எதிர் புறத்தில் இருக்கும் மல்லிகை பந்தலையும்,தென்னை மரங்களையும், வாழைக்கன்றுகளையும்,அதன் அருகே இருந்த செடிகளில் பூத்து குலுங்கிய மலர்களையும் ரசித்தவாறு நின்று கொண்டிருந்தாள் .

ஏதோ ஒரு வித்தியாசமான ஓசையில் திரும்ப அங்கே வரிசையாக நின்று கொண்டிருந்த மாடுகளையும் அதன் கன்றுகளையும் பார்த்தவளின் விழியில் சிறு தவறு கூட சொல்ல முடியாத அளவுக்கு தூய்மையாக இருந்த இடத்தையும், அங்கு வேலை செய்து கொண்டிருத்தவர்களின் செயலையும் தன் நிலை மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.

நகரத்தில் வண்டிகள் ஓசையும் இரைச்சல்களையும் கேட்டு கொண்டிருந்தவள்,இங்கே இயற்கையான பசுமையான சூழ்நிலையையும்,இனிமையான குரல்களையும் கேட்டவள் தன் வாழ்நாள் முழுவதும் இங்கையே இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினாள்.

ஹாரன் ஓசையில் கேட்டவர் தன் பேத்தியை காணும் ஆவலில் தன் வயதையும் பொறுப்படுத்தாமல் அங்கே ஓடி வந்தனர் வெங்கடாச்சலம் ,மதுரம் தம்பதியர் .

தன் நிலை மறந்து ரசித்து கொண்டிருந்த பேத்தியின் அருகே சென்று இதமாக அணைத்துக் கொண்டார் மதுரம் பாட்டி.

தன்னை யாரோ அணைப்பது புரிய தன் நிலைக்கு வந்தவள் பாட்டி,தாத்தாவை கண்டு அவர்களை அன்புடன் அணைத்துக் கொண்டாள் .

உன் அன்பில் உன் அணைப்பில்..!Donde viven las historias. Descúbrelo ahora