08. உன் நினைவுகளில் நான்

82 8 10
                                    

💞 உன்னை நானும்
என்னை நீயும்
கணங்கள் தாண்டி
கண்டிட வேண்டும்....

உன்னை சந்திக்க
ஒரு கணம் கிடைத்தால்
அக்கணமே என் உலகம்
நின்றிட வேண்டும்....

நீ செல்லும் வழியையோ
உன் மறைவையோ என் விழிகள்
காணுமேயானால்
அக்கணமே என் விழிகள்
குருடாகிட வேண்டும்....

நிஜத்தில் நிலையில்லை
என்றாலும்
நினைவுகளிலாவது நம் சந்திப்பு
நிகழ்ந்தேற வேண்டும்
உனக்காக....
அதிலாவது நீ என்னை
பிரியாத நிலை வேண்டும்
எனக்காக....😉

..NR ..

அவளும் நானும்Where stories live. Discover now