12. இமை

50 7 16
                                    

❤ நொடிக்கொரு முறை இமைத்திடும்
என் இமையை கண்டால்
இப்பொழுதெல்லாம்
எனக்கு பிடிப்பதேயில்லை..

எங்கே உன்னை காணும் போதும்
இது போலவே விளையாட்டாய்
நடந்து கொண்டால்
உன்னை இமைக்காமல்
பார்க்க வேண்டுமென்ற
என் ஆசையில்
இடையூறு வந்துவிடுமோ?

இல்லை,,

உன்னை பார்க்க பிடிக்காது
நான் கண் மூடி
சில்மிஷம் செய்வதாக
நீ தவறாக நினைத்து
கொள்வாயோ என்று தான்..

எப்படி சொல்வேன் உன்னிடம்..

கண்டித்து பார்த்தும்
கண்ணடித்து என்னையே
கவிழ்க்க நினைக்கும்
அதன் சில்மிஷத்தை.... 😉

உன்னை என்ன தான்
செய்வதோ என் கண்ணே?..
இப்படி கொஞ்சுவதை தவிர❤

..NR..

அவளும் நானும்Where stories live. Discover now