32. உன் நினைவுகள்

30 5 6
                                    

💞 உன்னை விட
உன் நினைவுகளை
மிகவும் விரும்புகிறேன்..

உன் நினைவுகள்
உன்னை போல்
என்னை கண்டதும்
மறைவதில்லை
மாறாக இறுக்கி
அணைத்து கொள்கிறது..

உன் நினைவுகள்
உன்னை போல்
எப்பொழுதும் என்னை
பிரிந்ததும் இல்லை
பிரிய நினைத்ததும்
இல்லை பிரிந்து
விடப்போவதுமில்லை..

உன் நினைவுகள்
உன்னை போல்
எப்பொழுதும்
என்னை தனிமையில்
தவிக்க விட்டதுமில்லை..

உன் நினைவுகள்
உன்னை போல்
எப்பொழுதும் என்னை
காயப்படுத்துவதும்
இல்லை எப்பொழுதும்
நிராகரிப்பதும் இல்லை..

உன் நினைவுகள் எப்பொழுதும்
இதமானவை,
இன்பமானவை,
என் உயிரோடும் உணர்வோடும்
கலந்து கொஞ்சி
விளையாடுபவை
எனக்கு உன்
நினைவுகள் தரும்
சந்தோஷமே போதும்..

உன் நினைவுகள்
மட்டும் போதும்
போதும்....😉
எங்கிருந்தாலும்
நல்லா இரு
அதுபோதும் எனக்கு.... 😐

உன் நினைவுகளுடன்
....NR....

அவளும் நானும்Where stories live. Discover now