உனக்கான
என் காதல்
நொடிப்பொழுதில்
உருவாகவில்லை
மூடியிருந்த
என் மனக்கதவை
உன் வார்த்தைகளால்
தட்டி திறந்தாய்
ஆதியில்
இதழில் நின்ற
சிறுநகையை
அந்தத்தில்
விழி வரை
விரிவடையச்செய்தாய்
மண்ணில் வீழ்ந்த
மழை துளியாய்
என்னுள்
காதல் மணம்
வீச செய்தாய்
கடல் நோக்கி
நகரும்
நதியாய்
காதல் தேடி
நம் நிகழ் காலம் .
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
