வரண்டுப் போன
என் தேசத்தில்
வான் மழை நீ
பட்டு போன
என் இதயத்தில்
துளிர்த்த
பசுந்தழை நீ
திக்கு தெரியாத
என் பயணத்தின்
கலங்கரைவிளக்கம் நீ
ஒளி இல்லாத
என் இரவின்
மின்மினி நீ
பசியுற்ற
என் பகலின்
முதல் கவளம் நீ
நிறமில்லா
என் ஓவியத்தின்
வர்ணம் நீ
வாய் மொழியாத
என் காதலின்
தவிப்பு நீ
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
