எப்படி முடிகிறது
உன்னால் ....
என் கனவுகளுக்கு
விலங்கிட்டாய்
அமில வார்த்தைகளால்
உயிர் பறித்தாய்
உன் செயல்களால்
என் இதயத்தை
செயலிழக்க செய்தாய்
உனக்கான என்
நேசத்தை
மதிக்க மறுக்கிறாய்
கண்ணீரோடு என்
காதலையும்
கரைக்க சொல்கிறாய்
என் காதலறியாதது
போல நடிக்கிறாய்
என்
கன்ன மேடுகளில்
கண்ணீர் கோலம்
தீர்ந்திடுமா?
இருண்ட காலம்!!!!
ESTÁS LEYENDO
கவிதைகள் தமிழில்
Poesía"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
