காகிதம்

342 8 2
                                    

வெற்று காகிதமாய்
இருந்த போது கூட
உணரவில்லை நான்
வெறுமையாய்

என்னைப் பற்றிய
உன் எண்ணங்களை
நீ பதிவு செய்யும் வரை !!

காதலெனும் தூரிகை கொண்டு
அன்பென்ற வர்ணங்களால்
என்னில்
நல்லதொரு ஓவியம்
செய்வாய் என்றிருந்தேன்

கார் வண்ணத்தில்
தோய்த்தெடுத்து
என் காதலுக்கே
கருப்பு கொடி காட்டுவாய்
என்றெண்ணவில்லை !!!

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now