உலக வங்கிகள்
போதவில்லை
உன் புன்னகைகளை
சேமிக்க
நீ கொட்டி போன
மயிரிழைகளை
மயிலிறகாய்
சேர்க்கிறேன்
உன் மூச்சு காற்றை
சேமிக்க
வகை தேடுகிறேன்
உன் கடைக்கண்
பார்வைகளை
என் கண்களால்
பதிவு செய்திட
விழைகிறேன்
இருந்த போதிலும்
உரைக்க மறுக்கின்றன
உள்ளத்தின் காதலை
உன் காதோடு
என் உதடுகள்!
VOCÊ ESTÁ LENDO
கவிதைகள் தமிழில்
Poesia"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
