இரு நிமிடங்கள்
என்று கூறிவிட்டு
சமையலறையில்
நீ மறைகையில்
உணர்ந்துவிடுகிறது நெஞ்சம்
வயல்வெளி விற்று
விண்ணைத்தொடும்
அடுக்குமாடி குடியிருப்பில்
வாழ வந்தவனின்
மன வெறுமையை !
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
