நிறமிழந்த வண்ணத்துப்பூச்சி

105 8 2
                                    

வண்ணத்துப்பூச்சியாய்
வர்ணங்கள் கொண்டவளை
துன்பத்தில் நனைய வைத்து
கருப்பு வெள்ளையாய்
மாற்றினாய்

கண்ணீரோடு
கரைந்து விட்டன
என் வண்ணங்களும்

இறக்கைகள்
களைத்து போகையில்
இளைப்பாற தோள்கள்
கேட்டதற்கோ
என்னையும் என் காதலையும்
உன் கால்களால்
எட்டி உதைக்கிறாய்

உன் காதலெனும்
மலரில் துய்ய
நான் வந்தபோதே
கலந்திருக்கலாம்
நீ  தேனுடன் விஷத்தை!!

கவிதைகள் தமிழில்Donde viven las historias. Descúbrelo ahora