முடியவில்லை ... என்னால்

107 11 4
                                        

விடுவிக்க முடியவில்லை என்னால்
உன்னையும்
உன்னைப் பற்றிய நினைவுகளையும்
என் இதயக்கூட்டிலிருந்து!!!

மழை நாளில்
கைப்பிடித்து நடந்த போது
என் விரல்களில் ஒட்டிக்கொண்ட
உன் விரல் ரேகைகளை
அழிக்க வழித்தெரியாமல்
திணறுகிறேன் நான் !!!

என் மனப்பக்கங்களில்
உன்னை பற்றிய பதிவுகள்
மட்டுமே பதிவுறுகின்றன!!!

தெரியவில்லை எனக்கு
நெஞ்சைத் தட்டும்
உன் நினைவலைகளை
நிறுத்துவதெப்படி என்று!!!

கவிதைகள் தமிழில்Where stories live. Discover now