தள்ளி தள்ளி
போகும் உன்னைப் பற்றிய
எண்ணங்களை
தள்ளி விட முடியவில்லை
என்னால்
ஊமையாய் நின்றவளிடம்
வார்த்தையாய்
வந்தவன் நீ
என் இரவின்
பூரண சந்திரன்
நீ
என் தாகத்திற்கு
தண்ணீர்
நீ
என் கண்ணீருக்கு
கைக்குட்டை
நீ
என் கவிதைகளின்
வார்த்தைகள்
நீ
என் இரவின்
இருளும்
நீ
என் பகலின்
ஒளியும்
நீ
உன் அழகும்
ஒளியும் தண்மையும்
இன்றியமையாயையும்
புரியவில்லை உனக்கு
நிலவைப் போல.
KAMU SEDANG MEMBACA
கவிதைகள் தமிழில்
Puisi"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
