முடிந்து விட்ட
தொலைபேசி
உரையாடலின் பின்பு
கூச்சலிட தொடங்கிவிடுகிறது
என்னுள்
உன் வார்த்தைகள்
விழி மூடிய பின்பு
வண்ணங்களாய் விரிகின்றது
உன்னைப் பற்றிய
எண்ணங்கள்
என்ன செய்வேன் நான்
உன்னை மட்டுமே
பிடித்திருக்கிறது
என் நினைவுகளுக்கும்
என் கனவுகளுக்கும் .
YOU ARE READING
கவிதைகள் தமிழில்
Poetry"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
