விலகி போன பின்பே
விலைமதிப்பில்லாத்து
என்று புரிகிறது
அம்மாவின் அன்பு
சிறு வயதில்
சிடுசிடுத்த பொழுது
சீர்தூக்கி பார்க்கத்தெரியவில்லை !
வாழ்க்கை புரியத்தொடங்கும்
போதோ
வார்த்தைகள் என்னிடமில்லை !
உன்னைப் பற்றி
உன்னை தவிர
அனைவரிடமும் வாழ்த்துரைக்கிறேன்
உன் முகம் நோக்கி
உரைத்திட
வெட்கி தலைகுனிகிறேன் !
அன்று
என் கண்ணீரைக் காட்டி
காரியம் சாதித்த நான்
இன்று
உதட்டின் வளைவில்
உள்ளத்தை மறைக்கிறேன் !
சிறு பிள்ளையாகவே
இருந்திருக்கலாம் !
என்றும் இன்பமாய்
மகிழ்ந்திருக்க அல்ல !!
இன்றும் துன்பமென்றால்
உன் மடியில்
விழுந்து அழ !!!
VOUS LISEZ
கவிதைகள் தமிழில்
Poésie"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" - பாரதியார்
