தோல்வித் தலைவனின் புலம்பல்

161 19 10
                                    


ஆராரோ அடிக்குறாங்க

அரச்சொல்ல பேசுறாங்க !

கத்தி மேடையில

காலெல்லாம் ரத்தம் ஆச்சு !

சித்தம் கலங்கிருச்சு

மொத்தமும் முடிஞ்சிருச்சு !

கண்ண மூடுனாலும்

கல் வந்து சேருதம்மா !

காத்துல படம் வரஞ்சேன்

காகிதமா நான் கிழிஞ்சேன் !

காத்த துலை போட்டு

கட்டினது,

அரக்கு மாளிகைனு

அறியாம போனேனே !

தீக்குச்சி வாசத்திலே

தீக்கிரையா ஆனேனே !

முள்ளு செடி மேல

ஓணானானா நான் நின்னேன் !

அரைடவுசர் பொடுசெல்லாம்

சுருக்கோடா அலையுதுங்க !

கள்ளிச் செடி நான்னு

காலர் தூக்கி இருந்தேனே !

சில்வண்டு பயலெல்லாம்

சில்லு சில்லா கிளிக்குறானே !

எண்ணிப் பயனென்ன

என்னென்னமோ நடக்குதிங்க !

நல்ல சேதி சிறுசின்னு ஆனாலும்

ஆனாலும்,

லாட்டரி பிரய்ஸ்சாட்டம் பெருசாத்தா

எனக்கிருக்கும் !

குப்பையில கிடந்தாலும்

பசியாற காத்திருக்கேன் !

கிறுக்கல்Where stories live. Discover now