நானும் இந்நாட்டு மன்னன்

48 6 5
                                    


வீடில்லை

காடில்லை

ஊனில்லை

ஊரில்லை

உறக்கமில்லை

உற்றார் உறவினர் இல்லை

நட்பில்லை

எந்த நாதியுமில்லை

வாளுமில்லை

வாழ வழியுமில்லை

நானும் இந்நாட்டு மன்னன் தான் !


மன்னன் சொல் கேட்பீரோ

என் நாட்டு வாழ் மக்களே !


பணம் பையில் இருப்பின்

ஊர் கொண்டாடும் - உனை

உயர் பண்பாடும்

பணம் பஞ்சாகிப் போனதென்றால்

உன் உயிர் திண்டாடும்

ஊர் சொல் போடும்

அது உன் வாயில் மண் போடும் !


பொருள் பற்று கொண்டே

வாழ்வர் யாரும் உடை உடுத்துய

மிருகம் !

பொருள் அற்று தமை

நிறுத்தி கொண்டோர்

புதிய வடிவில் தெய்வம் !


இருப்பதென்ன

போனதென்ன

இறக்கும் போது யாருக்கென்ன லாபம் !

இதை எண்ணி தினம்

வாழும் வாழ்கை வஞ்சமில்லா

வானம் !


நமையறிந்தா நாம் பிறந்தோம்

நமையறிந்தா நாம் இறப்போம்

இதில் நடப்பதெல்லாம்

நாமறிந்த செயலல்லவே !

அது நமக்கானதும் அல்லவே !


துன்பம் நிறந்தரமானது

அழிவதில்லை

இன்பம் இடைவெளியானது

முழுமையில்லை !


நடப்பது நடந்தே தீருமெனின்

அதில் கவலைகொள்ள

இடமேது

இல்லை அதை நீந்தி கடக்கும்

நிலையேது !


பளபளக்கும் பளிங்கு சொர்க்கம் என்று

காலடி வைத்தால் !

அங்கு பளபளக்கும்

பாம்பு கூட நரகமாக்கும்

பளிங்கின் முகத்தால் !

பாவம் கூட வளர்ச்சி தரும்

கனம் நேர்மை கூட வீழ்ச்சி தரும் !


மனிதன் வேறு

மிருகம் வேறு

என்றும் அல்லவே

மனிதனுல்லும் மிருகமுண்டு

மிருகத்துல்லும் நல்ல மனிதமுண்டு !


இருள் ஒன்று உள்ளதாலே

மானுட பிழைப்பு !

இதில்

தூக்கம் என்பதில்லையெனில்

யாவருக்கும் ஆறிலேயே சாவெனும் சிறப்பு !


படும் துயரை யார்கேற்பினும்

கேலி செய்வோர் என்றே

இங்கு இறைவனெல்லாம்

படைக்கப்பட்டோர் கல் வடிவில் நன்றே !


உண்மை மட்டும் பேசும் பொருளது

இவ்வுலகிளும் உண்டு

அவ்வுலக ஆச்சர்யம் நாமன்று

நம் முகம் காட்டும் நிலைக் கண்ணாடியே !

கிறுக்கல்Where stories live. Discover now