மதுர வீரன் எங்க சாமி

70 8 4
                                    

செமயான சாமி அவரு

மீச

தலப்பா

கையில வெட்டருவா

கால்ல தண்டம்னு

அழகான காவல் தெய்வம் !

வருசம் தவறாம

விழா எடுத்து

பூச பண்ணி

எங்க சேரிச்சனமெல்லாம்

பாத்துகிட்ட எங்க சாமி !


சாமி கோவக்காரருடா

தப்பு செஞ்சா எவன இருந்தாலும்

விட மாட்டாரு

கோவக்கார சாமிடா அவருனு

தாத்தா சொல்ல கேட்டிருக்கேன் !


அப்பெல்லாம் சேரில

யார்க்கு என்ன நோவுனாலும்

அவரு தான் அடைக்கலம்

அது என்ன மாயமோ

நிசமாவே சரியாப்போகும் !


ஒரு நாள் ரோட்டோர இடஞ்சலுன்னு

சர்கார் காகிதம் வர

சாமிய காப்பாத்த யார் யார் கிட்டயோ

பேசினாங்க சேரிப் பெருசுங்க

எவனும் கண்டுக்கல !


சாமிய காப்பாத்த ஊரெ கெஞ்ச

சாமிக்கு கூட சாதி இருக்குன்னு

அப்போ தான் தெரிஞ்சது !


கடப்பாரல ஒடச்சு

தூக்கிட்டு போனாங்க வண்டில வச்சு

எத்தனையோ பேர காப்பாத்துன

என் சாமி

கம்பீரம ஊர்வலம் போச்சு

இல்லாம போனாலும்


மதுர வீரன் எங்க சாமி !

கிறுக்கல்Where stories live. Discover now