கடல் கடந்து
நெலம் பரந்த
எந்த தூர தேசத்துலயும் வேணாம் !
மாத்து மொழி பேசும்
மாநிலத்துலயும் வேணாம் !
ரவைக்கு கிளம்பி
காலைல சேறும் வேத்து
ஊருலயும் வேணாம் !
பஸ்ஸ புடிச்சு
வம்பாடு பயணம் பன்னும்
அத்துவானக் காட்டுலயும் வேணாம் !
அடவடி கூட்டத்துல
திரியுர டவுனுலயும் வேணாம் !
இட்டேறிக்கு அக்கட்டால
இருக்கற கிராமமும் வேணாம் !
எங்கப்பன்
காடு
மலை
கடல்
நதி
நாடு
நிலம்
எதையும் தாண்டாம
எனப்பாக்க நெனச்சுடனே
நிமிசத்துல முகம் பாக்குர
தொலையில எனக்குன்னு
மாப்பிள்ளை வேணும் !