புயலடிச்சாலும்
மழையடிச்சாலும்
எவனாச்சும் பழி வச்சாலும்
பாதிப்பு எங்க கூறைக்கு தான்சந்தெல்லாம் சனமோடும்
சாக்கடை வீடேரும்
கொசுவெல்லாம் பாட்டு பாடும்
கட்டாந்தரையில கன்னியும் கழியும்எவனோ திட்டம் தீட்ட
எவனோ சுரண்டித்திண்ண
கிடச்சதென்னவோ
நலமில்லாத நாங்கள்தான்எவன் பழிச்சா என்ன
எவன் இழிச்சா என்ன
எவனுக்கு என்ன தெரியும்
எங்க வாழ்க்க வலியவாழ்நாள வறுமைக்கு தொலைச்சு
சாதி ஆட்டத்துல
வழிகள் அடைக்கப்பட்ட சனத்துக்கு
பேதமில்லா இடந்தந்த
இந்த நதிக்கரை நாகரீகம்
என்னைக்காச்சும் வளராமயா போகும் !