ஊரு சனமெல்லாம்
உதாசீனப்படுத்தியும்,
உசுரு வாழ, வழி பாக்குது
ஒரு சீவன் !சீரு, சனத்தி
சொத்து, சொந்தம் இல்லாம
பொறந்தா, பாவமுன்னு
பொறக்கும்போது தெரியலயே !வானத்து கும்மிருட்ட
வக்கனையா தேச்செடுத்து,
கண்ணு காது மூக்கு வச்ச
கலங்கமில்லாத பச்சக் கவி முகம் !ஆர்ப்பரிச்ச அழுவாச்சிய
அசகாம, அடக்கி வச்சு
வாழ்க்கை முச்சூடும், தேவையின்னு
பொறந்த
அன்னைக்கே மிச்சம் வெச்சானோ ?கதையில கூட கேட்டுடாத
குரூரகுண சீலன்,
பெத்த மகனையே சாகடிக்கும்
பெண் அடிமைப் பித்தன்,
கல்லு,
கடப்பாற,
அம்பு,
கத்தின்னு, இதுல
எதுக்கு கால் இருந்தாலும்,
தான நட நடந்து
இப்படியும் ஒன்னு உசுரோட
இருக்கனுமானு,
கொன்னே போடும் !
கொடுரா விந்து ... அவனப்பன்இடி இடிச்சா எனக்கேன்ன,
மழ பேஞ்சா எனக்கென்ன,
என் வாழ்க்க முடிஞ்சதுன்னு,
மகன் நெனப்பு இருந்த போதும்,
சோகத்த முன்ன வெச்சு,
சோலி நேருன்னு,
அவ உண்டு,
அவ வேல உண்டுனு,
அர வாழ்க்க
அவளுக்கு... அவனம்மாபேச்சுல கொல்லும் அப்பன்னா,
பேசமாக்கொல்லும் அம்மா !நானிருக்கேன்,
நானிருப்பேன்,
இனியோன்னும் பயமில்ல,
கண்ணா வா
காதலனே வா,
என்னுறவே வா,
எனதுயிரே வா,
நமக்குன்னு ஒரு வீடு,
நமக்குன்னு ஒரு குழந்த,
கைகோர்த்து வாழுவோம்முனு,
சிறுக்கி மவ ஒருத்தி சொல்ல,
வானம் பாத்த பூமியில,
மழைச்சாரல் பட்டுச்சுன்னு,
பட்டாசா பொரிஞ்ச மனசு ,
சில்லர காசா செதரி நிக்க,
நீயாரு நானாருன்னு அவ தாய் சொல்ல,
தட்டாம என்ன தட்டிவிட்டு போயிட்டாலே,
அது சரி, அவளுக்காச்சும் தாயிருக்கு,
இவனுக்குன்னு ஒரு நாயிருக்கா !இத்தனைக்கும் நடுவுல,
இறகொடிஞ்ச பறவ கணக்கா அவனுசுரு !
அவன் சிரிப்பேல்லாம் வலி,
முறைப்பெல்லாம் காயம்,
பேச்செல்லாம் பகல் நிலா,
மூச்செல்லாம் வறும,என்னவென்னு தெரியாம,
அடுத்த அடி புரியாம,
இல்லாத பாதையில
ஒத்தையில போறவன் !
காத்து,
வெயிலு,
மழ,
புயலு,
நாய்,
நரின்னு,
எது வந்து தாக்கினாலும்,
சாவு இன்னும் வரலயேன்னு,
சலைக்காம எட்டு வைக்கும்,
அவன் வாழ்க்க,வாழ வழியில்லா வாலிபனின்,
உயிருள்ள சவ வாழ்க்க !!!