நீ
சிரிச்சுத்
தள்ளித்
தவழ்ந்து
விழுந்து
நடந்து
ஓடிப்
பாடி
ஆடுன இடமெல்லாம்
நான் போறேன்
உன் காலடித்தடம் கூட
காணலயே !காடும் மேடும்
கண்ட கவியெல்லாம்
பாடி வச்சதென்னவோ
உன் பெரும தானடி !வீட்டுக் குழந்தைக்கும்
இல்லாத சிறப்பெல்லாம்
ஊர் பெத்த மவராசி
உனக்குன்னு இருந்துச்சு !கல்லு முள்ளு
காடு மலையெல்லாம் தாண்டி வந்து
ஒத்த ஓட்டத்துல ஓஞ்சே போயிட்டயோ !நீ பெத்த மண் குழந்தைய
நாம் பறித்த கோவமோ !இலக்கணம் எழுதுனமே
உந்தன் தலக்கணம் புரியலயே !வாக்கப்பட்டது
காட்டுமிராண்டி கூட்டமுன்னு
பொறந்த வீடே
போயிட்டியோ !உன் வரவ எதிர்பார்த்து
ஊரு சனம் காத்திருக்கு !!!வந்து சேருடி !!! வாய் பெருத்த ராசத்தி !!!