கையொப்பம்

48 10 3
                                    

முதன்முதலாய்

நான் வரைந்ந மிக்கு மவுஸ்க்கு கீழ்

என் பெயரை

நெளிவு சுளிவின்றி

நான் எழுதிய கையொப்பம்

பலவருடங்கலாய்

படங்களுக்கு

கீழேயே படிதிருந்தது


நினைவு தெரிந்தது முதல்

அழகுபடுத்தலுக்கு பின்

நான் இட்ட முதல்

கையொப்பம்

பத்தாம் வகுப்பு அனுமதி சீட்டுக்கானது

அது முதல் அதுவே நிறந்தரமானது


அதன் பின்னே அழகலகாய்

படம் வரைந்து நான் இட்ட கையொப்பம்


பாடப்புத்தகத்தின் பின்

பகுதிகிறுக்கலுக்கு நடுவே

நான் இட்ட கையொப்பம்


பள்ளி மேஜையில் காப்வஸால்

இட்டு மகிழ்ந்த கையொப்பம்


தூசு நிறந்த கார் கண்ணாடியில்

நான் இட்ட கையொப்பம்


பனி படந்த மேஜையில்

நான் இட்ட கையொப்பம்


முதன் முதலாய் ரசிகைக்கு

நான் இட்ட கையொப்பம்


பணி நிமிர்த்தமாய் கர்வமுடம்

நான் இட்ட கையொப்பம்


இன்று என்னைப் பரிதாபமாய் பார்கிறது

கடன் பத்திரங்களில் !

கிறுக்கல்Where stories live. Discover now