குப்பை

51 12 14
                                    

வானமெல்லாம் வெடிச்சத்தம்,
மேகமெல்லாம் மத்தாப்பு,
புல்லு நுனியிலயும் புகைப்பேச்சு,
கண்ணு மினுக்க, கத பேசி
நான் இன்னாளு,
நீ இன்னாளுனு ,
சாதி பேத, பேச்சொன்னும் இல்லாம,
எல்லோரும் எல்லார்க்கும் வாழ்த்துச்சொல்லி !
இன்புறச்சிரித்தே,
சகலரும் கூடி ,
வெடிபோட்டுக் கொண்டாடின
சமத்துவக்கொண்டாட்டாம் !
வெடிச்ச வெடி தீர்ந்தாச்சு
வெத்துப்பேச்சும் ஓஞ்சாச்சு
பண்டிகைக் கழிவா
பார்க்கும் இடமெல்லாம்
பட்டாசுக்குப்ப
எல்லாச்சாதியும் சேர்ந்து சேத்த குப்பைய
ஒருச் சாதி மட்டும்
தனியே அள்ளுது !

சாதிகள் இல்லையடி பாப்பா !
சாதிகள் இல்லவே இல்லையடி பாப்பா !

கிறுக்கல்Where stories live. Discover now