ஜகமெலாம் மெச்சிடும்
ஜாலாதி ஜாலனாம்
வீராதி வீராணம்
காலனின் காலனாம் !ஈரேலு லோகத்துக்கப்பால்
இருப்பவனாம் இவன் தேவன்
அவனருள வாழ்வதுவே
நம் வாழ்வதுவாம்ஏலு கடல் அவனதாம்
ஏலு மலை அவனதாம்
எடுக்கின்ற எம்முடிவும் அவனதாம்அவனின்றி அசையாதாம்
அண்டமும்
இம்மானிடப் பிண்டமும்ஆயிரம் கண்கொண்டே
ஆட்டுவிக்கும் ஆதியவன்
நம் மாந்தர்
உயிர் உலுக்கும் ஆத்திரத்திரத்தின்
பாதியவன்உயிரின் உயிர் சேர்க்க
விந்துப் படுகொலை செய்பவனாம் !
உயிர் சேர்த்த
அண்டத்தில் ஆருயிர் வளர்ப்பவனாம் !ஒரு நாளில் உயிர் மாய்க்கும்
கோடான கோடி ஜீவிகற்கும்
புண்னியம் செய்திடின்
மரு ஜென்மம் அதுவருளுமாம்நோய் நொடிக்
கனவுக் காதல்
சாதல்
இவையாவும் அவனின் செயலாம்காசிலான் அவன்
படும் பாட்டை
பார்த்து ரசிப்பதவன்
அன்றாட நடவடிக்கையாம்காசுடையோன்
கூற்றை கேட்டு
ஆசியும் புரிவானாம்அவனிஷ்ட விதிகளை
எமதிஷ்டமாக்குவானாம்
கஷ்ட துஷ்டம் யாவும்
அவனின் விளையாடலாம்சொர்க நரகம் என
பயமுறுத்தி வயிர் வளர்ப்பவனாம் !
பிரித்தாலும் சூழ்ச்சியை
தெரிந்தாலும் அவனறிஞ்சனாம் !என் சகனை
தீண்டாதவனாக்கி
அதில் தீட்டுக் கழிப்பவனாம் !மார்க்கங்கள் பலவாக்கித் மார்க்கமாய்
அலைபவனாம் !தூணிலும் இருந்து
துரும்பிலும் இருந்து
தயவாத தயய் மாந்தனை,கையேடுத்துத் தொழு
மண் சாய்ந்துத் தொழு
மண்டியிட்டுத் தொழுபகுத்தறியா புவி மைந்தனே !