ஒத்தையில நிற்கிறனே
ஒத்த சொல்லு வாரலயே
நாக்கு மேல பல்லால
பத்து சனம் தூத்துதடிநான் வளத்த சீவனெல்லாம்
என்ன ச்சீ போனு பேசுதடி
கால் நடந்து போறேண்டி
இரக்கமில்லா காட்டுக்குள்ளே
காலமெல்லாம் சாவேண்டி
கயத்தோட வீட்டுக்குள்ளேராத்திரி நேரத்துல
ராக்கோழி தூங்கையில
ராவோட ராவாக
ரகசியம போகுதடி என்
உசுரு
பட்டமரம் ஆச்சுதடி
பாழ்பட்டு போச்சுதடி
என்னோட மனசுகண்ணகட்டிகிட்டு
கண்ணாடி பாத்தேண்டி
காத பொத்திகிட்டு
கானமொன்னு கேட்டேண்டி
காட்டாத்து வெள்ளத்துல
மீனொன்னு பிடிச்சேண்டி
மூச்ச விட்டுபுட்டு
மூர்ச்சையாவே வாழ்ந்தேண்டிசித்தனென்னடி
சிவனென்னடி
புத்தனென்னடி
புகழென்னடி
காசு முன்னே
அத்தனையும் அகதி தானடிபாசமென்னடி வேஷமென்னடி
தோற்றமென்னடி தோஷமென்னடி
பணம் வந்துட்டா
பாவியும் பகவான் தானடிநான் போகாத ஊருக்கு போறேனடி
உசிரு மறந்து
அதையும் துறந்து போறேனடி !