எங்களுக்கு என்ன குறைச்சல்

40 8 4
                                    


வானமே கூறையாக இருக்க

நட்சத்திர ஒளியில்

கால் நீட்டி

கதைபேசும் எங்களுக்கு என்ன குறைச்சல் !

எல்லாம் உண்டு எங்களிடம்


ஊரே புதுத் துணியில் அலைய

ஓட்டை டவுசருடன் ஒய்யாரமாய் திரியும்

எம் பிள்ளைகள் !

எனக்கு ரெண்டு வேஷ்டி

அவளுக்கு ரெண்டு சேல

எல்லாம் இருக்கு எங்ககிட்ட

எங்களுக்கு என்ன குறைச்சல் !


படுக்க ஃபிளாட்பார்ம் இருக்கு

எவரேனும் வந்தால் குலைக்க நாய் இருக்கு

எங்களுக்கு என்ன குறைச்சல் !


மழை வந்தாலும் வெயில் வந்தாலும்

விரிக்கவும், போர்த்தவும்

ஃளெக்ஸ் இருக்கு

அடுப்பு எரிக்க

தண்டவாளத்துல பொறுக்குன கரி இருக்கு

நைட் டின்னருக்கு கடசாத்துன அப்ரோம்

கிடக்கும் வேஸ்டு புட் இருக்கு

எங்களுக்கு என்ன குறைச்சல் !


சுகத்துக்கு இருக்கவே இருக்கு

அமாவாசை இருட்டு

எங்களுக்கு என்ன குறைச்சல் !


எந்த தண்ணியும் குடிப்போம்

எந்த சோறும் திண்போம்

குப்பையில வாழும்

எங்களுக்கு என்ன குறைச்சல் !

கிறுக்கல்Where stories live. Discover now