யார் அங்கே ?
இறைவனை கைது செய்யுங்கள் !
இங்கே குழந்தைகள்
பட்டினியில் சாக
எங்கோ பாலபிசேகமாம் !
இங்கே பணமின்றி மக்கள் சாக
எங்கோ எவனோ மக்கையர்
மாரில் பணம் வீசுகிறானாம் !
இங்கே வீதி வேறு
சேரி வேராம் !
உழைக்கும் மக்களுக்கு
இடமில்லை
கொலுக்கும் பேய்களுக்கு
இலவச இடமாம் !
ஏன் இந்த ஏற்றத்தாழ்வு
காரணமான இறைவனை
இழுத்து வாருங்கள்
அவனை கைது செய்யுங்கல் !