அன்று ஸ்கூலுக்கு
போகமாட்டேன் என்று
அடம்பிடித்த அவனை
அடித்து அனுப்பி வைத்தாள்
அவன் அம்மா !
உணவு வேளையில்
அடுத்த பீரியட்
கணக்கு வாத்தியாரின்
அடியின் பயத்தில் அமர்ந்திருந்த அவனை
பக்கத்து வீட்டு அண்ணன்
அழைத்து செல்கையில்
அடிக்கு தப்பிய சந்தோசத்தில் அவன் !
வீடு வந்ததும்
கூடி நின்ற கூட்டம்
புரியாமல்
அவர்களுடன் அவனும்
அழுது
கிடத்தி வைத்திருந்த
அம்மாவின் தலைமாட்டில் ஏரி
அலமாரி பொம்மைகளை
இளவுக்கு வந்தோரிடம்
அறிமுகம் செய்தான் !