கனா காண்கிறேன் !
நினைவொளியில்
எனைக் காண்கிறேன்
நினைவொலியில்
நிதம் நகர்கிறேன் !மலை நீந்தும் மேகம்
எனை நீந்துதே
கடல் நீந்தும் ஓடம்
எனை மீட்டுதே !பேரண்டம் இங்கெ
சிறு சிப்பிதான் !
நான் கூட அதனில்
ஒரு சிற்பிதான் !சுகம் சுகம்
இங்கே
நான் வாழ்கிறேன் !
இங்கே
நிழல் துறக்கிறேன் !
இங்கே
நிலை மறக்கிறேன் !
இங்கெ
இளைப்பாருகிறேன் !
இங்கே
இமை மூடுகிறேன் !உணர்வோடுதான்
உறவாடுகிறேன் !
உளமோடு நான்
உறையாடுகிறேன் !பட்சிகள் யாவுமிங்கு
பல கதைகள் பேசும் !
எங்கும் காற்றிலிங்கு
புது தாய்ப்பால் வாசம் !காட்டு மரங்கள் கூட
இங்கு கானம் பாடும் !
வண்டின் சுதி சேர்த்து
புது ராகம் சூடும் !உயிர்யாவையும்
என் உறவானதே !
உலகம் இங்கே
புது மலர் போன்றதே !தாய்மண் தவழ்ந்து
தாய்மடி தேடி
நான் தமிழில் தலை சாய்க்கிறேன் !