உண்மை உயிர் என்றும் உயரம் சேரும்

48 6 9
                                    

மொட்டு மெல்ல
இதழ்கள் குவித்து
மலர காத்திருக்கு,
எண்ணமெல்லாம்
வெளிச்சம் வேண்டி
வானம் பார்த்திருக்கு,

பூக்காமலே மலர்தான்
சாகுமோ !
காரணமின்றியே உயிர்தான்
பிறக்குமா !

துணிஞ்சு நடப்போம் ,
திமிரு வளர்ப்போம் ,
நெஞ்சம் சுமக்கும்
சோகம் யாவும்
அலரி ஓடும்
அழக ரசிப்போம் !

சின்ன நிலவே ,
சீனி கரும்பே,
ஒதுங்கி ஓடாதே !
போனதெல்லாம்
தல குனிஞ்சு திருப்பும்
கவலை கொள்ளாதே !

ஊர் அலைஞ்சு
கலை கானவே
மனம் தினம் ஏங்குதோ !
புறம் மதிக்கவே
அகம் புதைத்ததை
மனம் வாட்டுதோ !

பணம் தேடியே
தினங்கள் ஓடுதோ !

இதுதான் மானுடம்
இரையே இங்கு ஆருடம்
சில்லரை கூட சிணுங்கி பேசும் !

வலிகள் கோர்த்து
வளையம் செய்வோம்
விரல்கள் குவித்து
அணிகள் அணிவோம் !

வாழ்க்கை என்றும்
வாழ அழைக்கும்
கையை பிடித்து
பாடல் இசைக்கும் !

உண்மை உயிர் என்றும்
உயரம் சேரும் !

கிறுக்கல்Where stories live. Discover now