இயலாதோன் நூறுண்டு வாசலின் முன்னின்று வீதியின் வழி பார்த்தே !
சாம்பலில் தேய்த்துறு, கயிறுதரித்தொரு
யாசகணும் உள்ளுண்டே !
அவன் அருளி அரிபொருளும் விளங்குமாம் !
அவன் தட்டில் யாமிட்ட யாசகம்பால்
வேண்டுதலும் நடக்குமாம் !
குருடாக,
முடமாக
இயலாமல் வெளிநிற்க்கும் அவர் காவா
பரப்ரம்மமே !
அவர் தவிர்த்தெமை காப்பாய் என
நம்பும் அவராரோ வேதாந்த மூடரோ !
முன்னின்றும் மூடமாகி
தடமாகி வழி செல்வோர் யாசிக்கும்
அவராரொ சித்தாந்த ஞானியரோ !